சுதந்திர சாசனம் என்பது ஒரு தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் வெளிப்பாடு ஆகும். சுதந்திர சாசனம் தேசிய இனம் ஒன்றின் அடிப்படைக் கோட்பாடுகளையும் அடிப்படை உரிமைகளையும் உள்ளடக்கிய ஆவணம் ஆகும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான கேள்விக் கொத்தில் ஜக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகளின் அடிப்படையில் வரையப்படும் இந்த சாசனம் தமிழீழ மக்களுக்கு மாற்ற முடியாத உரிமை உண்டு எனத் தெரித்துள்ளது.
தமிழீழ சுதந்திர சாசனதத்தினை அச்சத்தோடு சிங்கள அரசு பார்த்து வரும் நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஓருங்கிணைப்பில் பல்வேறுபட்ட தமிழர் அமைப்புக்களின் கூட்டிணைவுடன் புலம்பெயர் தேசங்களெங்கும் தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான செயற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.
இந்நிலையில் தமிழீழ சுதந்திர சாசனத்தை வரைவதற்கு உலகெங்கும் வாழும் தமிழ்மக்களினதும் சிங்கள முற்போக்கு வாதிகளினதும் மற்றும் அனைத்துலக மனித உரிமை செயற்பாட்டாளர்களினதும் உள்ளீட்டைப் பெறுவதற்கு விருப்பம் கொண்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ள தமிழீழ சுதந்;திரச சாசன உருவாக்கத்திற்கான செயற்குழு தெரிவித்துள்ளது.
கீழே உள்ள தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான மக்களின் கருத்துக்களை உள்வாங்குவதற்கும் கேள்விகளுக்கு http://tamileelamfreedomcharter.org எனும் இணையவழியூடாக பதில்களை இட்டுக் கொள்ள முடியும் என்பததோடு அச்சுப்பிரதிகளைப் பெற்றுக் கொண்டும் கருத்துக்களை பதிலிட்டு வழங்க முடியும்.
கேள்விக் கொத்தின் விபரம்:
இச் சுதந்திர சாசனம் தமிழீழ மக்கள் தனித்தன்மை கொண்டவர்கள், இன்று சிறீலங்கா என்று அழைக்கப்படும் தீவில் மரபுவழி தாயக பூமியை உடைமையாகக் கொண்டவர்கள், பன்னாட்டு சட்டங்களின் கீழ் சுதந்திர நாடொன்றில் தம்மைத்தாமே ஆளும் உரிமை கொண்டவர்கள் என முரசறைகிறது. மக்களது தன்னாட்சி உரிமை தற்போதைய பன்னாட்டு சட்டங்களின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.
மேலும் இச் சாசனம் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் போது 100,000 மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள் எனவும் தற்பாதுகாப்பு, தற்பத்திரப்படுத்தல் ஆகிய சட்டம் மற்றும் தார்மீக கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் சுதந்திரமும் இறைமையும் உள்ள நாடொன்றிலேயே தமிழ் மக்கள் கண்ணியமாகவும் மற்றும் மனித உரிமைகளைத் துய்து மகிழவும் முடியும் என முரைசறைகிறது.
மேலும் இச் சாசனம் இலங்கைத்தீவில் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த சிங்கள இனவாத அரசுகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட கொலை, வன்புணர்ச்சி, கொள்ளை ஆகியவற்றிற்குப் பரிகாரமாக தமிழீழத்தில் இனப் பாகுபாடும் மற்றும் மனித உரிமை மீறல்களும் பல தலைமுறைகளாக தமிழ் மக்களுக்கு துன்பத்தை விளைவித்தன என்ற உண்மையைக் கருத்திற் கொண்டு ஆண் பெண் சமத்துவம் மத சுதந்திரம் போன்ற சகல உரிமைகளும் அங்கீகரிக்கப்படும் என முரசறைகிறது.
மனித உரிமைகள் என்பது அடிப்படைச் சுதந்திரங்கள் மற்றும் பாதுகாப்புகள் ஆகும். அவற்றுக்கு மனதர்கள் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் உரித்துடையவர்கள் ஆவர். மனித உரிமைகள் என்பது அகவை, தேசியம், இனம், நிறம், மதம், பால், பாலியல் முன்னுரிமை அல்லது வேறு தகைமை வேறுபாடிமின்றி யாவருக்கும் பொருந்தும் என்பதை இச் சாசனம் ஏற்றுக் கொள்கிறது.
சுதந்திர சாசனம் என்பது ஒரு தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் வெளிப்பாடு ஆகும். சுதந்திர சாசனம் தேசிய இனம் ஒன்றின் அடிப்படைக் கோட்பாடுகளையும் அடிப்படை உரிமைகளையும் உள்ளடக்கிய ஆவணம் ஆகும். சில உரிமைகள் முக்கியமானதால் குடிமுறை, பொருளாதார, சமூக மற்றும் பண்பாடு உட்பட அவற்றுக்குக் குறிப்பிட்ட சட்ட பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இவ்வாறன உரிமைகள் குறைக்கப் படவோ அன்றி நீக்கப் படவோ முடியாதவை. ஆனால் ஒத்திசைவுக்கு ஏற்ப உருவாகும் புதிய உரிமைகள் சேர்க்கப்படலாம்.
இச் சுதந்திர சாசனம் மூலமாக தமிழீழ மக்கள் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் ஜக்கிய நாடுகள் அவையால் தங்களுக்கு அடையாளப் படுத்துள்ள உரிமைகளை வலியுறுத்துகிறார்கள். மனித உரிமைகள் மதிக்கப்பட்டாலே சமாதானமும் பாதுகாப்பும் பேணப்படும் என்பதை தமது வரலாறின் மூலமாக நன்றாக அறிந்து கொண்ட தமிழீழ மக்கள் ஒருவருக்கொருவர் இந்த உரிமைகளை வழங்கியும் தம்முடன் வாழும் ஏனைய மக்களுக்கு இவ்வுரிமைகளைக் கொடுப்பதற்கும் தங்களை ஈடுபடுத்துகிறார்கள்.
இச் சுதந்திர சாசனம் ஜக்கிய நாடுகள் அவையின் பல்வேறு மனித உரிமை உடன்படிக்கைகளில் மற்றும் சாற்றுதல்களில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மனித உரிமைகளும் தமிழீழ அரசியலமைப்பு ஆவணங்களில் மாற்ற முடியாத உரிமைகளாக உள்வாங்கப்படும் என உறுதியளிக்கிறது.
ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகளின் அடிப்படையில் வரையப்படும் இப் சாசனம் தமிழீழ மக்களுக்கு மாற்ற முடியாத உரிமை உண்டு எனத் தெரிவிக்கிறது. அதே சமயம் அமைதியையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கு தம்மோடு தொடர்பில் வரும் சகலருக்கும் அவ்வுரிமைகள் உண்டென்பதை அங்கீகரிக்க வேண்டும் என்ற கடப்பாடு உண்டு என்றும் தெரிவிக்கிறது.
இச் சுதந்திர சாசனம் அரசின் நடவடிக்கைகளை எடை போடும் அளவுகோலாகவும் அதே சமயம் தமிழ் மக்களுக்கு அவர்களது உரிமைகளை அறிந்து கொள்வதற்கும் உதவுகின்றது. இப் பட்டயம் சட்டவாளர்கள் அல்லது முடிவு எடுப்பவர்கள் வினை செய்யும் போது மனித உரிமைகள் முன்னிடப்படுத்தப்பட வேண்டுமென்பதை உறுதிசெய்யும்.
இச் சுதந்திர சாசனம் மனித உரிமைகள் மற்றும் கண்ணியம் பாதுகாக்கப்படவிருக்கும் தமிழ் ஈழத்திற்கும் மனித உரிமைகள் மீறப்பட்டு அடக்குமுறை தொடரும் சிறீலங்காவிற்கும் உள்ள வேறுபாட்டை ஒப்பீட்டடிப்படையில் கோடிட்டுக் காட்டும்.
கேள்விக்கொத்து
(பதில்களை தருவதற்கு தரப்பட்டுள்ள இடம் போதாதுவிடின் பிறிதொரு தாளில் கேள்வி இலக்கத்தையும் அதனுடைய பதிலையும் கேள்விக்கொத்துடன் இணைத்துவிடவும்)
தமிழீழ சுதந்திர சாசனம்
தமிழீழ மக்களின் சுதந்திரம் பற்றிய கோட்பாடுகளை(கொள்கைகளை), இந்த சுதந்திர சாசனத்தில் தெளிவாக இயற்றி அதனை அனைத்துலக அரங்கில் முரசறைதல், எங்கள் சுதந்திரத்தினை அடைவதற்கான வழியென நாம் நம்புகின்றோம்.
1. தமிழீழ சுதந்திர சாசனத்தின் அவசியம் என்ன?
அ. அடிப்படை மனித உரிமைகள், சுதந்திரம், சொத்துக்கள் மற்றும் சுமூகநிலை பேணப்படுவதல்
ஆ. அது பெரும்பான்மை தனிமனித சுதந்திரங்களை உறுதி செய்வதோடு நீதித்துறைகளிலும், நிர்வாகங்களிலும் அரசுக்குள்ள அதிகாரத்தினை கட்டுப்படுத்தல்
இ. தமிழ் மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் அமையவிருக்கும் தமிழீழத்தின் மாதிரியினை விளங்க வைத்தல்
ஈ. மேற்கூறிய யாவும்
2. இந்த சாசனத்தினை உருவாக்குவதற்கும் முரசறைவதற்கும் யார் ஈடுபட வேண்டும் என்று நம்புகிறீர்கள்?
அ. .உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள்
ஆ. இலங்கையில் வாழும் தமிழர்கள்
இ. புலம்பெயர் தமிழர்கள்
ஈ. இலங்கை வாழ் தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும்
3. சர்வசன வாக்கெடுப்பின் மூலம் எட்டப்படும் முடிவு தமிழ் மக்களின் விடுதலைக்கான நிரந்தர அரசியல் தீர்வாகும் என நம்புகின்றீர்களா? இது அவர்கள் சமாதானத்துடனும் சுயகௌரவத்துடனும் பாதுகாப்புடனும் ஒரு தேசிய இனமாக வாழ வழி வகுக்குமா ?
அ. ஆம்
ஆ. இல்லை
இ. தெரியவில்லை
4. இலங்கைத் தீவில் தமிழ் தேசிய முரண்பாட்டிற்கான தீர்;வினை ஏற்படுத்துவதற்கு அனைத்துலக சமூகம் முக்கிய பங்காற்ற வேண்டும் என்பதனை அங்கீகரிக்கின்றீர்களா ?
அ. ஆம்
ஆ. இல்லை
இ.தெரியவில்லை
5. அப்படியானால் அனைத்துலகத்தின் பங்களிப்பு என்னவாக இருக்கும்?
எந்த மட்டத்தில் ? எவ்வளவு வரையறைக்குள் ? இதில் எந்த நாடுகள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
உங்களுடைய கருத்துக்களை தரவும்
6. தமிழீழ மக்களுக்கு வேறு எந்த அரசியல் தீர்வுகளை கருத்தில் கொள்கிறீர்கள்?
உரிமைகளும் சுதந்திரங்களும்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும், சுதந்திரங்களையும் இந்த சுதந்திர சாசனம் உறுதிப்படுத்தும்
7. வரலாற்று ரீதியாக தமிழீழ மக்கள் அனுபவித்த ஒடுக்குமுறையை கருத்தில் கொண்டு தமிழீழ சுதந்திர சாசனம் எந்த முக்கிய உரிமைகளையும் சுதந்திரங்களையும் கொண்டிருக்க வேண்டும்?
8. தமிழ் மக்கள் சுதந்திரத்திற்;கான உரித்துடையவர்கள் என்று கோருவதற்கு கீழ் வருவனவற்றில் எந்த உரிமைகள் அடிப்படையாக அமையும்?
அ. தாய்நாட்டிற்கான உரிமை
ஆ. சுயநிர்ணயத்துக்கான உரிமை
இ. தேசியத்துக்கான உரிமை
ஈ. இழந்த இறைமையை மீளப் பெறும் உரிமை
9. எங்கள் தேசியத்தை கோருவதற்கு மேலும் வேறு எந்த உரிமைகளை சேர்க்க வேண்டும் என எண்ணுகிறீர்கள்?
10. சுதந்திர இறைமையுள்ள ஒரு தமிழீழ அரசினை உருவாக்குவதற்கு ஒரு தமிழார்களாக சுய நிர்ணய உரிமை மற்றும் இறைமை என்பனவற்றை நீங்கள் பிரயோகிக்க விரும்புகிறீர்களா?
அ. ஆம்
ஆ. இல்லை
இ.தெரியாது
வரலாறு
இயற்கையாக பிரிக்கப்பட முடியாத எங்கள் தமிழீழப் பிரதேசம் அன்று தொட்டு இன்று வரைக்கும் சிறிலங்கா அரசின் ஆக்கிரமிப்புக் கரங்களுக்குள் இருக்கிறது.
11. இடைக்கால தன்னாட்சி நிர்வாகத்தினரால் பரிந்துரைக்கப்பட்ட இலங்கையின் வடகிழக்கின் எட்டு மாவட்டங்களாகிய அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, வவுனியா என்பன தமிழீழத்தின் பூகோள எல்லைகளாக வரையறுக்கப்படுவதனை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
அ. ஏற்றுக் கொள்கிறேன்
ஆ. இல்லை
இ. தெரியாது
12. இறுதியாக எங்களது பூர்வீக தாய்நாட்டை முழுமையாக மீளப் பெற்றுக் கொள்வதற்கும் அதன் பிளவு படாத்தன்மையை உறுதிப்படுத்துவதற்குமாக நீங்கள் நினைக்கும் சில தெரிவுகள் யாவை?
முன் நடந்த வரலாற்றில் இருந்து வேறு எந்த உதாரணங்களை எடுக்கலாம்?
13. சிறிலங்கா அரசாங்கங்களால் வாக்குறுதிகள் மீறப்பட்டமையாலும், ஒருபக்க சார்பாக ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டமையாலும் தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்ட வரலாறு பற்றி நீங்கள் அறிந்துள்ளீர்களா?
அ. ஆம்
ஆ. இல்லை.
இ. தெரியாது
14. தொடர்ச்சியாக சிறிலங்கா அரசாங்கங்களால் தமிழருக்கெதிராக இழைக்கப்பட்ட அடக்குமுறைகள், பாகுபாடுகள், அரச வன்முறைகள்,அரசினால் ஏவி விடப்பட்ட வன்முறைகள் பற்றி அறிந்து கொண்டுள்ளீர்களா?
அ. ஆம்
ஆ. இல்லை
இ. தெரியாது
15. தமிழர்களின் ஆயுதப்போராட்டம் தற்பாதுகாப்பு நிலையில் இருந்ததென்பதனையும்; அதாவது தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மூன்று தசாப்த காலங்களாக தமிழர்களின் அமைதி வழி, அகிம்சை வழி சனநாயக போராட்டங்கள் மற்றும் அரசியல் போராட்டங்கள் மிகக் கொடூரமான அரச வன்முறை மூலம் அடக்கியொடுக்கப்பட்டது என்பதனையும் தேசியப்பிரச்சினையை தீர்ப்பதற்கு உள்நாட்டு மற்றும் அனைத்துலக தலையீடு இன்மை காரணம் என்பதனையும் நம்புகிறீர்களா?
அ. ஆம்
ஆ. இல்லை
இ. தெரியவில்லை
16. 1972 ம் ஆண்டு மற்றும் 1978 ம் ஆண்டுகளில் சிறிலங்காவின் அரசியல் யாப்புகள் எழுதப்பட்ட போது தமிழ் மக்கள் அதில் பங்கு பற்றவில்லை என்பது பற்றி அறிந்திருக்கின்றீர்களா?
அ. ஆம்
ஆ. இல்லை
இ.தெரியவில்லை
சுதந்திர தேசத்தின் கருவிகள்
17. ஆனைத்துல கண்காணிப்பின் கீழ் தமிழீழத்தில் சனநாயக சுதந்திர தேர்தல் ஆணைக்குழு ஒன்று அனைத்துலக சனநாயக நோக்கங்களுக்கும் ,நியமங்களுக்கும் அமைய தேர்தல்களை நடாத்த வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?
அ. ஆம்
ஆ. இல்லை
இ. தெரியவில்லை
18. சட்டம்,ஒழுங்கு, ஆட்சி, கட்டளை, தீர்மானங்கள் என்பன சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனிதவுரிமைகள் பாதுகாப்பு நியமங்களுக்கு ஒத்ததாக இருக்க வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?
அ. ஆம்
ஆ. இல்லை
இ. தெரியவில்லை
19. அனைத்துலக மனிதவுரிமைகள் அமைப்புக்களின் உறுதுணையுடன் காத்திரமான (திறன் வாய்ந்த) பொறி முறையொன்றினை கொண்ட ஒரு சுதந்திரமான மனிதவுரிமைகள் ஆணைக்குழு ஒன்றினை மிகவிரைவில் அமைப்பதன் மூலம் மனிதவுரிமைகளை பாதுகாக்கவும், மனிதவுரிமைகள் கடமைப் பாடுகளை உறுதிப்படுத்தும் முகமாகவும் இருக்கவேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?
அ. ஆம்
ஆ. இல்லை
இ. தெரியவில்லை
20. இந்த மனிதவுரிமைகள் ஆணைக்குழு எந்தவொரு தனிப்பட்ட நபர் ஒருவரின் முறைப்பாட்டினைப் பெற்றுக் கொள்ளவும், எந்தவிதத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்(நஷ்டஈடு) வழங்கவும் அவரின் உரிமைகள் மீளுறுதி செய்யப்படுவதற்குமான முழு உரிமையையும் கொண்டிருக்கும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?
அ. ஆம்
ஆ. இல்லை
இ. தெரியவில்லை
கொள்கைகள்
21. எந்த மதத்திற்கும் தமிழீழத்தில் முதலிடம் கொடுக்கப்படமாட்டாது என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?
அ. ஆம்
ஆ. இல்லை
இ. தெரியவில்லை
22. தமிழ் தவிர, வேறு எந்த மொழி உத்தியோகபூர்வ மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்?
அ. ஆங்கிலம்
ஆ. சிங்களம்
இ. ஆங்கிலம்;, சிங்களம்
23. தமிழீழ குடிமக்கள் அனைவருக்கும் கல்வி இலவசமாக இருக்க வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?
அ. ஆம்
ஆ. இல்லை
இ. தெரியவில்லை
24. சிறுவர்கள் எல்லோருக்கும் கட்டாய ஆரம்ப கல்வி இருக்க வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?
அ. ஆம்
ஆ. இல்லை
இ. தெரியவில்லை
25. தமிழீழ குடிமக்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி வழங்கப்பட வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?
அ. ஆம்
ஆ. இல்லை
இ. தெரியவில்லை
26. தமிழீழத்திற்கு சுயாதீன கiயூட்டு ஊழல் ஆணைக்குழு ஒன்று தேவையென்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
அ. ஆம்
ஆ. இல்லை
இ. தெரியவில்லை
சுதந்திர தேசத்தின் கடப்பாடுகள்
27. அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் சட்டநியமங்களுக்கு தமிழீழம் கட்டுப்பட வேண்டும்?
அ. ஆம்
ஆ. இல்லை
இ. தெரியாது
28. தமிழீழம் அனைத்துலக மனிதவுரிமைகள் உடன்படிக்கைகளை ஏற்றுக் கொள்ளும்?
அ. ஆம்
ஆ. இல்லை
இ. தெரியாது
29. நீதிக் கோட்பாடுகள், சுதந்திரம்(விடுதலை), இறைமை, தன்னாட்சி, மனித கௌரவம் மற்றும் மக்களின் உரிமைகள் என்பவற்றை நடைமுறைப்படுத்த விரும்புகின்றீர்களா?
அ. ஆம்
ஆ. இல்லை
இ.தெரியவில்லை
30. தமிழீழத்தில் அரசுத் தலைவர் ஒருவர் ஆகக் கூடியது இரண்டு பதவிக் காலங்களுக்கு மேல் பதவி வகிக்க முடியாது என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?
அ. ஆம்
ஆ. இல்லை
இ.தெரியவில்லை
31. உலக குடியியல், அரசியல் உரிமைகள் சாசனம் சரத்து 27ல் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள் சிறுபான்மை இனத்திற்கும் உரியது என்பது உத்தரவாதமளிக்கப்படும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?
அ. ஆம்
ஆ. இல்லை
இ. தெரியவில்லை
32. நீதித் துறை நிர்வாகங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திணைக்களங்கள் தமிழீழத்தில் அமைக்கப்படும். நீதித்துறை அதிகாரங்கள் இத் திணைக்களங்கள் ஊடாகப் பகிர்ந்தளிக்கப்படுவதுடன் நீதிபதிகளின் (சுதந்திரம்) சுயாதீனத் தன்மை உறுதிப்படுத்தப்படும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?
அ. ஆம்
ஆ .இல்லை
இ. தெரியவில்லை
33. தமிழீழத்தில் சுதந்திர வர்த்தக வலயம் வேண்டுமா?
அ. ஆம்
ஆ. ஆம்,குறிப்பிட்ட காலத்திற்கு
இ. இல்லை
ஈ. வேறு
34. அமையும் தமிழீழம் பிராந்திய அமைதிக்கும் அதன் நிலையான தன்மைக்கும் (நிரந்தரத் தன்மைக்கு) வழி வகுக்கும்?
அ. ஆம்
ஆ. இல்லை
இ. தெரியாது
இக் கேள்விப் பட்டியலில் சுதந்திரம் தொடர்பாக குறிப்பிடப்படாத வேறு ஏதாவது உரிமைகள், விடயங்கள் இந்த சுதந்திர சாசனத்தில் உள்ளடக்கப்படவேண்டி இருப்பதாக நீங்கள் நினைத்தால் அதனை இங்கே குறிப்பிடவும்.
No comments:
Post a Comment