Neu;Nehf;F 31.05.2014
போர் நடைபெற்ற நாடுகளில், போரின் போது நடந்தகுற்றங்களைக் கண்டறிந்து தண்டனை அல்லது மன்னிப்பு வழங்குவதைப் பிரதான நோக்கமாகக் கொண்டு முயற்சிப்பது மிகமுக்கியமானது. அதேவேளைபோரில் பாதிக்கப்பட்டவர்களுடைய உரிமைகளை, அவர்களுக்கு வழங்கவேண்டிய முழுமையான புனர்வாழ்வு விடயங்களைக் கவனிப்பதும் இன்றியமையாத வொன்றாகும். ஆயினும் இவ்வாறான போருக்குப் பின்னான சூழ்நிலையில் முழுமையான புனர்வாழ்வு கவனிக்கப்படாமல் இருப்பது கவலைக்குரியது. இங்கே முழுமையான புனர்வாழ்வு என்று குறிப்பிடுவது பாதிக்கப்பட்டவர்களின் சமூகபொருளாதார நிலைமைகளை மீளக்கட்டியெழுப்புவதும் உளசமூககலாசாரம் அம்சங்களைக் கவனிப்பதுமாகும்.
பொதுவாக அபிவிருத்தியில் இருந்துமக்கள் பயனைப் பெற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியுமாயினும் பாதிப்புக்களுக்குஉட்பட்டநிலையில் உள்ளவர்கள் வெறும் பொருளாதார அபிவிருத்திகளால் எதிர்பார்க்கப்பட்ட முழுமையான பயனைப் பெறாமல் போவதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
கொவுதமாலா (Guatemala) சியறாலியோன் (Sierra Leone)கிழக்குத் தீமோர் (East Timor) கொலம்பியா (Colombia) போன்ற நாடுகளை பாதிக்கப்பட்ட மக்கள் தங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு முதலிடம் கொடுக்கும் நாடுகளாகக் கிறிஸ்டின் இவான்ஸ் (Christine Evans-2012) குறிப்பிடுகின்றார். இந்நாடுகள் போரிற்கு பிற்பட்ட சூழ்நிலையில்; உள்ளுரில் நிறுவப்பட்ட உண்மைகாண் ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் மூலம் அனைத்துலகசமூகத்தினதும் ஐ.நாவினதும் உதவியைப் பெற்று தம்மை மீள்கட்டமைப்புச் செய்தமையானது போரின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்டிருக்கும் நாடுகளுக்கு முன்மாதிரியான ஒருசெயற்பாடாக அமைந்துள்ளது. இச்செயற்பாட்டினை மேற்கொள்வதற்கு ஐ.நாவும் அனைத்துலககுழுமங்களும் முக்கிய பங்களிப்பை அளிக்கலாம், எனினும் நாட்டுக்குரியஅரசமைப்பே இதற்குரிய அடிப்படையான முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுபோர்க்காலத்தில் துன்புற்றவர்களுக்கு உரியஉதவிகளை வழங்க வேண்டும் என்றும் கிறிஸ்டியன் இவான்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
இச் செயற்பாடுகள் இடம்பெறாதவரையில் பாதிக்கப்பட்டவர்களுள் பெரும்பாலானவர்கள் தமதுபாதிப்புத் தொடர்பாக முறையீடு செய்வதற்கான சந்தர்ப்பங்களைப் பெறுவதோ, முறையீடுசெய்வதற்குரிய மனநிலையைப் பெறுவதோ, தங்களுக்குக் கொடுக்கப்படும் பதிலீடுகளைப்பெற்று பயன் பெறுவதோபெரும்பாலும் நிகழ்வது அரிதாகவே காணப்படுகின்றது.
கமிலாசமரசிங்க
(GameelaSamarasinghe -2013) அவர்கள் இலங்கையில் உருவாக்கப்பட்டகற்றுக் கொண்டபாடங்களின் அடிப்படையிலான நல்லிணக்க ஆணைக்குழுவினால் (LLRC) சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் உள்ளீடு பற்றிவிளக்கும் போது, 'மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கிய துன்பங்களும் அவற்றினால் உருவாகிய மனவடுக்களும் இருக்கின்றன என்பதை இவ்வாணைக்குழு ஏற்றுக்கொள்கின்றது' என்பதைச் சுட்டிக்காட்டுகின்றார்.
இவ்வாணைக்குழுவானது (LLRC) பாதிக்கப்பட்டமக்கள் எதிர்நோக்கும் துன்பங்களையும் அதனால் அவர்கள் எதிர்நோக்கி உள்ள மனவடுவினையும் கவனத்தில் எடுத்துஅவர்களுக்கு உளவளத்துணை வழங்கல், நீதிவழங்கல் ஆகிய பொறிமுறைகளை உருவாக்குதல், நஷ்டஈடு கொடுத்தல், போன்ற விடயங்களைச் செயற்படுத்துமாறு முன்மொழிந்துள்ளது. இனங்களுக்கு இடையேமனஒருங்கிணைப்பும் சமாதனமும் நடைமுறைக்கு வரவேண்டுமாயின் அதனைச் சட்டங்களிலும் அரசமைப்புகளிலும் பொருத்தமான மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலம் தான் செயற்படுத்த முடியுமென வெளிப்படுத்தியுள்ளது.
லத்தீன் அமெரிக்காவில் உள்ள அனைத்து அமெரிக்க மனிதஉரிமைகள் நீதிமன்றம் (Inter-American Court of Human Rights)துன்பப்பட்டசமூகங்களுக்கு வழங்கவேண்டிய நன்மைகள் பற்றி மிகவிரிவான விளக்கங்களை வெளியிட்டுள்ளது. அவற்றுள் அந்நீதிமன்றம் பண்பாட்டு அம்சங்களையும் கணக்கில் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். பண்பாட்டுஅம்சம் எனும்போது இறப்பு சார்ந்தகிரியைகள், சடங்குகள் போன்றவற்றை நினைவுகூருதல் போன்றவைஉள்ளடங்கும். இதுபோலவே ஐரோப்பிய மனிதஉரிமைகள் நீதிமன்றமும்(European Court of Human Rights) மனிதஉரிமைகள் பெரியளவில் நசுக்கப்பட்டபோது நிகழ்ந்தவற்றைக் கணிப்பில் எடுத்து நீதிவழங்க உரியநடவடிக்கைகளை எடுத்துள்ளது.
வடமாகணத்தில் போரால் நலிவுற்றபிரதேசங்களில் சிலபொருளாதார உள்கட்டமைப்பு அபிவிருத்திகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் அவை பெருமளவிற்கு மேலெழுந்த வாரியான விருத்தியேயாகும் என்கின்றார் சர்வானந்தன்(Sarvananthan 2012). மேலும் இவை துன்புற்றோரின் உளசமூக நன்னிலைப்பாட்டை உருவாக்குவதற்கும் உதவவில்லை.
போர்முடிந்து ஐந்து வருடங்கள் கடந்தநிலையிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நஷ்டஈடோ, சமூகமீளாக்கமோ, தேசிய ஒருமைப்பாடோ இன்னும் ஏற்படுத்தப்படவில்லை என்றநிலையே காணப்படுகின்றது. சமூகம் அபிவிருத்தித்திட்டங்களால் முழுமையாகப் பயன் பெறவேண்டுமாயின் பொருளாதார அபிவிருத்திமட்டும் போதாது. அதற்குச் சமூகம் தனதுதனித்துவமான பெறுமானங்களையும் விழுமியங்களையும் மீள்கட்டமைப்புச் செய்துகொள்ளும் நிலையை அடையவேண்டும் என வீரக்கொடிமற்றும் பெர்ணான்டோ (Weerackody and Fernando )போன்றவர்கள் 2011ல் சுட்டிக்காட்டியமை இங்கு கவனிக்கத்தக்கது.
அனைத்துலகச் சட்டம், ஆயுதப்போராட்டங்களால் பாதிக்கப்பட்டமக்கள் தமது சிதைக்கப்பட்ட வாழ்வியற்கோலங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு உரிமை உடையவர்கள் என்பதை வலியுறுத்துகின்றது. இதில் உளசமூகஅம்சங்களை உள்ளடக்கிய முழுமையான புனர்வாழ்வு என்பது இன்றியமையாத ஒருபொறிமுறையாக அமையும். ஐ.நா, பாதிக்கப்பட்டோருக்கு பரிகாரமாகவும் பதிலீட்டு உரிமையாகவும் இழந்தவற்றை மீளவழங்குதல், நஷ்டஈடு கொடுத்தல், மீளக் குடியேற்றல்,திருப்தியைஉருவாக்குதல், நடந்தவைபோன்ற கொடூரமான சம்பவங்கள் மீண்டும் நிகழாதுஎன நிச்சயமான உறுதியை அளித்தல் என்ற ஐந்து கொள்கைகளை வகுத்துள்ளது. இவற்றைத் தனிமனித, குடும்ப, சமூகமட்டங்களில் செயற்படுத்துவது சிறந்த பயனைத் தரும்.
உலகளாவியரீதியில் மனித உரிமைகளை ஏற்றுக் கொள்வதில் கணிக்கத்தக்க அளவு முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன, குறிப்பாக ஆரோக்கியமாக வாழ்வதற்கான உரிமைச்சட்டத்திலும், மனிதாபிமானச் சட்டத்திலும், குற்றவியல் சட்டத்திலும் இவை தொடர்பான உடன்படிக்கைகள் இலங்கை உட்படப் பெரும்பாலான நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுக் கையெழுத்திடப்பட்டுள்ளதுடன் இவை அந்நாடுகளின் உள்நாட்டுச் சட்டங்களிலும் இடம் பெற்றுள்ளன.
மனிதஉரிமைகளைஸ்திரமாகநிறுவியபின், அவற்றைமீறும் போதுஏற்படும் விளைவுகளை விளங்கி, அங்கீகரித்து, அதற்கான பதிலீடுகளை, பரிகாரங்களைச் செய்ய வேண்டிய பொறுப்பையும்ஏற்றுக்கொள்ளவேண்டும். அம்மீறலால் ஏற்படும் பாரதூரமான விளைவுகளுக்கு பதிலீடுகேட்கும் உரிமைமக்களுக்கு உண்டு என்பதை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் உரோமாபுரிச் சட்டம்,குறிப்பாக, 75ஆம் 76ஆம்சரத்துக்களில் [The Rome Stature of the International Criminal Court (ICC), notably Articles 75 and 79 (ICC, 1998)] 1998) வலியுறுத்தியுள்ளது. மனித உரிமைகளை மீறியவர் யாராக இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பதிலீடு வழங்குவது அந்நாட்டிலுள்ள அரசமைப்பின் பொறுப்பு என்றகருத்து நிலைபடிப்படியாக வலுப்பெற்று வருகின்றது.
புனர்வாழ்வு பெறுவதற்கானஉரிமை, சிறுவர்உரிமை உடன்படிக்கையிலும்,சமூக, பொருளாதார, பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கையிலும், மாற்றுவலுவுடையோர் உரிமைகள் உடன்படிக்கையிலும், சித்திரவதை செய்தல், குரூரமான, மனிதாபிமானம் அற்றமுறையில் தரக்குறைவாக நடத்துதலும் தண்டித்தலும் என்பவற்றுக்கு எதிரான உடன்படிக்கையிலும ;விசேடமாகக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொடூரசித்திரவதைக்கு எதிரான அமைப்பின் மூன்றாவது சரத்தானது பாதிக்கப்பட்டவர்களுக்குப் பதிலீடுகொடுக்கும் பொறுப்பும் கடமையும் நாட்டுக்குரியஅரசமைப்பைச் சார்ந்ததென்றும், அதேநேரத்தில் பதிலீட்டைக் கேட்டுப் பெறுவதற்குப் பாதிக்கப்பட்டவர்கள் உரித்துடையவர்கள் என்றும், இதன் மூலம் நியாயமானதும், கணிசமானதுமான, நஷ்டஈட்டை, உள சமூக அம்சங்களை உள்ளடக்கிய முழுமையான புனர்வாழ்வை மக்கள் பெறமுடியும் என்றும் குறிப்பிடுகின்றது. ஆயினும் இவற்றை நடைமுறைப்படுத்துதல் என்பது பெரியசவாலாக உள்ளது. வளம் குறைந்த நாடுகளில்;, உள சமூக அம்சங்களை உள்ளடக்கிய முழுமையான புனர்வாழ்வுச் செயற்பாட்டைச் சமூகமட்ட அணுகுமுறையினூடாக நடைமுறைப்படுதுவதன் மூலம் இதனைச் சாத்தியப்படுத்திக் கொள்ளலாம்.
இலங்கையைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டோரின் துயர்துடைக்கும்;முயற்சியில் செலவுகுறைந்த, அதிகபயனுள்ள சிகிச்சையாகச் சமூகம்சார் அணுகுமுறையே பொருத்தமானதாக அமையும். போருக்குப்பின்னர் காணப்படும் பரந்த சமூகஅளவிலான கூட்டுமனவடுவும் அரசின் நீதிசார்,நிதிசார்தடைகளும் இவ்வாறான சமூக அணுகு முறையைக் கைக்கொள்வதனையே வேண்டி நிற்கின்றன.

கடுமையான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், தகுதியான பதிலீட்டைப்பெறாத பட்சத்தில், கௌரவத்தை இழத்தல்,சமூகத்தில் இருந்துஒதுக்கிவைக்கப்படுதல்,குற்றம் உள்ளோர் எனநினைத்துத்தாமே ஒதுங்கிக் கொள்;ளுதல் முதலியவற்றால் தொடர்ந்து பாதிப்புறுவர். இத்தகையவர்களுக்குத் தொடர்ந்து சமூகத்தில் பிறருடன் சமமாகப் பங்குபற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் அளிக்கப்படவேண்டும். உளசமூக அம்சங்களை உள்ளடக்கிய முழுமையான புனர்வாழ்வு ஒரு காத்திரமான உரிமைஎன வற்புறுத்துகிறார் ஸ்வீயாஸ்(Sveaass -2013).